Tuesday, January 25, 2011

பிடிக்கவில்லை என்று சொல்லும் பெண்ணையே
விரட்டும் ஆண்கள் நாங்கள்....
பிடிக்கிறது ஆனால் வேண்டாம் என்று சொல்லும்
உன்னையா விட்டு விடுவேன் ????
காதலி என்னை காதலி ...

Monday, January 24, 2011

என் தோட்டத்தில் 
ஆயிரம் மலர்கள் பூத்தாலும்...
மாற்றான் தோட்டத்து மல்லிகை 
உன்னை கண்டால் தான்
என் மனம் ஊஞ்சல் ஆடுது...!!

Tuesday, January 4, 2011

நாட்குறிப்பு !!!!

உன் பேரை தினமும் 
குறிப்பிடுவதற்கே ...
நானும் நாட்குறிப்பு 
எழுத போகிறேன்...
இன்று முதல்..

Monday, January 3, 2011

ஆன்லைன்ல் அரட்டையும் இல்லை...
offline மெசேஜ் இல்லை...
sms சேட்டையும் இல்லை..
மொபைல் பேச்சும் இல்லை...
ஆனால் இன்று ஒரு நாள்...
ஒரு நொடியாய் உள்ளது...
நீ மட்டுமே என் நினைவில் நின்றதால்... !!!

Wednesday, December 22, 2010

நிழலற்படமாய் இருக்கும் நீ
நிஜமாய் வருவது எப்போது...???
பிறகு உன் நிழலாய் வருவேன் அப்போது...!!!

Friday, September 3, 2010

Online chat !!!

இரவு மட்டுமே உன்னோடு பேச முடிவதால் ...
இருளாய் இருந்தாலும் பரவாயில்லை...
இனி என்வாழ்வு இரவிலேயே இருக்கட்டும்..

Tuesday, August 31, 2010

கருப்பு !!!

எந்த பூக்களுமே ஒதுக்காத
வண்ணம் கருப்பு...
சூரியனின் தாக்கத்தை ஏற்கும்
வண்ணம் கருப்பு...
உழவனை வாழவைக்கும் கார்மேகம்
வண்ணம் கருப்பு...
உத்தமன் என சொல்லும் ராமனின்
வண்ணம் கருப்பு...
ஊரையே காப்பாற்றும்,காக்கும்
கடவுள் கருப்பு...
அதே வண்ண தோல் எனக்கு
இதனாலே உன் பெற்றோருக்கு
என்மேல் வெறுப்பு
ஆகையால் ஆனாய் நீ
எனக்கு இழப்பு


பின் குறிப்பு :

என் காதலியாய் உன்னை
முதல் முதல் சந்தித்த போது
நீ அணிந்த உடை கருப்பு...
நாம் காதலர்களாய் கடைசியாக
கண்ட போது அதே கருப்பு
ஆடையை நீ அணிந்து இருந்தது
என் வண்ணத்தின் தனி சிறப்பு...