ஒளி கொடுப்பதும் உயிர் எடுப்பதும் இருப்பவரின் கையில்...
Tuesday, January 20, 2009
ஓவியம்
உன்னை எண்ணி
ஓவியம் வரைய
தாள்
எடுத்தேன்...
உன் நிழல் வந்து
பூர்த்தி ஆனது
ஜன்னல் ஓரத்தில்
நீ...
உண்டியல்
செல்லா காசுகளை
சேமிக்கும் உண்டியல்
இடுகாடு...
மூட(ர்) நம்பிக்கை
எல்லா பூக்களும்
விற்றயாயிற்று...
இவள் கூடை மட்டும்
நிரம்பி
உள்ளது...
கைம்பெண் என்பதா
லா???
பலூன் சிறுவன் !!!
வட்ட
வட்டமாய்...
வ்கை
வகையாய்...
நீளமாய்
குள்ளமாய்...
பல பல
வண்ணமாய்...
வாங்கி விளையாடும் வயதில்
வாய் கூவி விற்கிறான்
பலூன் சிறுவன் !!!
குழந்தை தொழிலாளி!!!
குழந்தை தொழிலாளி எதிர்ப்பு
கூட்டம்...
தலைவர்
முழங்க...
தேநீர் பரிமாறுகிறது
பத்து வயது சிறுவனின்
கைகள்....
காதல்...கல்யாணம்...
காதல்...கல்யாணம்...
என்னவள்
மணமாலை
சூடி
வந்து அமர ....
நான் அவளை மட்டுமே
காண...
கெட்டி
மேளம் சத்தம்
கேட்க...
தாலி ஏறுகிறது
என்
காதலிக்கு...
நான் அட்சதை
தூவினேன்...
காதல்...கல்யாணம்...???
Monday, January 19, 2009
சிற்பம்!!!
கல்லாய்
இருந்த
நான்...,
சிற்பம்
ஆனேன்!!!
உன்
காதலால்!!!
என்னையே நான்
செதுக்கி
கொண்டு!!!
நம் பெற்றோருக்கு!!!
அன்பு உள்ளமாய் ...
ஆசை நெஞ்சமாய் ...
இன்பங்களை மட்டும் நமக்காக
ஈன்றெடுக்கும்
உன்னதமான
உயிர்!!!
ஊரே
எதிர்த்தாலும்
எப்போதும்
நமக்காக
ஏங்கும்
ஜீவன்!!!
ஒரு
போதும் சலிப்பு இல்லாமல்
ஓயாமல்
பணியாற்றும் தெய்வம்!!!
Thursday, January 15, 2009
நன்றி !!!!
காணும் பொங்கல் அன்று முதல்
என் கனவுகளை காட்ட(மாய்)
வந்துள்ளேன் .....
காண வருவோருக்கு நன்றி....
அது கனிய முயல்வோருக்கு....
கோடான கோடி நன்றிகள்!!!!!!!
Newer Posts
Home
Subscribe to:
Posts (Atom)