Monday, October 19, 2009

மௌன அஞ்சலி

என் இறப்பிற்கு
மௌன அஞ்சலி
செலுத்தினால்...
ஆனால் அவள் அறியவில்லை
அவள் மௌனம் தான்
எனக்கு அஞ்சலி ஆனது என்று...

புதை குழி

என் காதலில்
நான் ஆழமானேன்...
நீயே என்னை
அதில் தள்ளி
புதைப்பாய் என்பதை
அறியாமல்...

மழை


இனி மழையில்
நடக்காதே...

காய்ச்சலாம்
உன் தேகத்தை தீண்டியதால்
மழைக்கு...

பிரிவு

குருடனாய் இருந்த என்னை
ஓவியனாய் மாற்றினாய்...

உன் அன்பினால்...
ஊமையாய் இருந்த என்னை
பேச்சளானாய் மாற்றினாய் ...
உன் பாசத்தால்...
ஊனமாய் இருந்த என்னை
ஓட்ட பந்தய வீரனாய் மாற்றினாய்...
உன் காதலால்...
சினமாய் இருந்த என்னை
நல்ல குணமாய் மாற்றினாய்...
உன் பரிவால்...
உயிரோடு இருந்த என்னை
நடமாடும் பிணமாய் மாற்றினாய்...
உன் பிரிவினால்...

ரோஜா


அழகாய்...
அற்புதமாய்...
இதமாய்...
இதழ்களால் ஆனா ரோஜா நீ...
கூர்மையாய்...
கொடுரமாய்...
குத்தும் முள்ளாக நான்...
என்றும் என் பதுமை உன்னை
காத்திட...

உலகம் ( பார் )


கற்றது கை அளவு...
கல்லாதது உலக(பார்) அளவு...
இதை உணர்ந்து
உலகை கற்க தான்
பலரும் செல்கின்றனரோ...
"பாரு"க்கு ???

எழுதுகோள்


எழுதுகோள் எடுத்து
உன் பெயர் எழுத எண்ணினேன்...
முனை கூறு உன்னை
காய படுத்தும் என
நிறுத்தி கொண்டேன்...

Saturday, October 3, 2009

மனித நேயம்- குப்பை வண்டி


ஆங்காங்கே சிதறி கிடக்கும்
மனித நேயத்தை
ஒன்றாக திரட்டி...
ஊரெங்கும் பகிர்ந்து அளிப்போம்...
நம்ம ஊர் குப்பை அள்ளும்(கொட்டும்)
லாரியை போல்...

மனிதன்????


பேருந்து நிறுத்தம்...
நில்லாமல் போகும் பேருந்து...
நொந்து கொள்ளும் மனிதன்...
தான் ஏறிய பின்
நிறுத்தத்தில் நிற்கும் பேருந்தை
அலுட்டி கொள்கிறான்...
" ஏன் எல்லா இடத்திலயும் நிறுத்தி தொலைகாரன்னு தெரியல"
என்று...

சிறை கூண்டு


காதலும் இல்லை...
காமும் இல்லை...
புரிதலும் இல்லை...
புணர்தலும் இல்லை...
அன்பும் இல்லை...
அணைப்பும் இல்லை...
இன்பமும் இல்லை...
ஈர்ப்பும் இல்லை...
ஆனால்...
ஒன்றாக ஒரு பந்தம் உண்டு...
கல்யாணம் என்னும் சிறை கூண்டு...